எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் விசேட அறிவிப்பு
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், போதியளவு கையிருப்பை வழங்குவதற்காக எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் எரிபொருளை விநியோகிக்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் மற்றும் கனியவள களஞ்சிய முனையம் ஆகியவற்றுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, டுவிட்டர் பதிவொன்றில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விலை குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கடந்த சனிக்கிழமை, முன்பதிவுக் கட்டளைகளை வழங்காமை மற்றும் குறைந்தப்பட்ச கையிருப்பை பேணாமை என்பன, நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
உடனடித் தேவை
அத்துடன், விலை குறைப்பு மற்றும் எரிபொருள் ஒதுக்கம் அதிகரிப்புக்குப் பின்னர், பொதுமக்களின் உடனடித் தேவை அதிகரித்தமையும் இதற்கு காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
