வெள்ளை வேன் கடத்தல் கொலைகள்: நாமலுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்
நாடாளுமன்றத்தில் வைத்து தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe), நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) எச்சரித்துள்ளார்.
வெள்ளை வேன் கடத்தல்காரர்களையும் படுகொலையாளிகளையும் பாதுகாத்தவர்கள் ராஜபக்சக்கள் எனவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (22) நாடாளுமன்றத்தில் வைத்தே அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு
நடைபெற்ற நேற்றைய (22) விவாதத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உரையாற்றிக் கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
அதை பெரிதாக செவிமடுக்காத தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் தயாசிறி ஜயசேகர நீங்கள் எல்லோரும் கொழும்பு மாநகர சபை ஆட்சியை கைப்பற்ற ஒன்றிணைந்தீர்கள் எனவும், ஊடக சந்திப்புகளை நடத்தியதுடன் எதிர்கால நண்பர்களாகினீர்கள் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏன் நீங்களும் எமது நண்பர் தான் என அமைச்சரை நோக்கி தெரிவித்தார்.
படுகொலையாளிகள்
இதற்கு பதிலளித்த அமைச்சர், “ நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொன்றவர்கள், படுகொலையாளிகள்.
வெள்ளை வேன் கடத்தல்காரர்களை பாதுகாத்தவர்கள், உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்.
சரத் பொன்சேகாவை என்ன செய்தீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்க விட்டீர்களா ?ஆகவே என்னிடம் வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
