விஐபி கதிரையை ஏற்க மறுக்கும் அமைச்சர்
நிகழ்வுகளில் தமக்கு விசேட பிரமுகர்கள் அமரும் கதிரைகளை கொண்டு வரவேண்டாம் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன(shandana abeyratne) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தளம்(puttalam) மாவட்ட இலக்கிய விழாவிற்காக ஆனமடுவ சுதம்பாய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்தவர்கள்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்விற்கு வருகை தருகின்றார்கள் என்பதற்காக, தேவையில்லாத செலவு எதனையும் செய்யவேண்டாம். அத்துடன் நான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளின் செலவையும் குறைப்பது தொடர்பாக நிறுவனங்களுக்குத் தெரிவிக்க தயாராகி வருகிறேன்.
அதேபோன்று விசேட பிரமுகர்கள் அமர்வதற்கான கதிரைகளை எமக்கு கொண்டு வர வேண்டாம். நாங்கள் சாதாரண பிளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்தவர்கள். அந்த கதிரைகள் போதும்.
பணத்தை வீணாக்க விரும்பவில்லை
இந்த ஆனமடுவை எமக்கு அறிமுகமில்லாத பிரதேசம் அல்ல.எனவே அந்தச் சூழலினால் எவ்வளவோ உயரிய பதவிகளுக்குச் சென்றாலும் மரங்களும் பசுமையான ஏரிகளும் கொண்ட அழகிய இடம் இது , நாம் இருந்த கடந்த காலத்தை மறக்க முடியாது. எனவே, எந்த நிகழ்ச்சிக்கும் தேவையில்லாத செலவு செய்து பணத்தை வீணாக்க விரும்பவில்லை என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |