மின்சாரத்தை சேமிக்க அமைச்சரின் முன்மொழிவு
Gamini Lokuge
save electricity
street-lights
By Sumithiran
மின்சாரத்தை சேமிக்கும் வகையில் வீதிகளில் மின்விளக்குகளை அணைக்குமாறு அரசாங்கத்திடம் முன்மொழிவொன்றை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே(Gamini Lokuge) வழங்கியுள்ளார்.
இதன்படி மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை வீதிகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு இரவு 11.00 மணிக்குப் பின்னர் மீண்டும் மின்விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் அல்லது மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வீதிகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு பின்னர் அதனை ஒளிரச் செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக காமினி லொககுகே மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடுமையான மின்தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள இலங்கை, நாளை முதல் மின்வெட்டை நடைமுறைப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
