சலுகைகளுக்காக மக்களை காட்டிக்கொடுக்கும் அமைச்சர்களே மலையகத்தில் இருக்கின்றனர் : பழனி திகாம்பரம்

Srilanka people ministers betray Palani Digambaran concessions
By MKkamshan Feb 21, 2022 02:15 AM GMT
Report

சலுகைகளுக்காக மக்களை காட்டிக்கொடுக்கும் அமைச்சர்களே மலையகத்தில் இருக்கின்றனர் எனவும் அதனால் தான் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா வழங்கப்படுகின்றது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் (Palani Digambaran) தெரிவித்துள்ளார்.

பத்தனை போகாவத்தையில் உள்ள கலாச்சார மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

"நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா வழங்கப்படும் நிலையில், தோட்டத்தொழிலாளர்களுக்கு அற்பதொகையில் கோதுமை மா வழங்கப்படுகின்றது. இது பெரும் அநீதியாகும்.

எமது மக்களை சிறுமைப்படுத்தும் செயலாகும். 50 வருடங்களாக அரசியல் செய்வதாக மார்தட்டிக்கொள்கின்றனர். ஆனால் நல்லாட்சியின் போது அந்த நான்கரை வருடங்களில் தான் மலையகத்தில் மாற்றம் ஏற்பட்டது. கிராமங்கள் உருவாக்கப்பட்டன. காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதனை காட்போட் என சின்ன பையன் ஒருவர் விமர்சிக்கின்றார்.

அது பொய், அந்த உறுதிப்பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து, கடன் பெறலாம். எமது மக்களை ஏமாற்றி, அவர்களைக் காட்டிக்கொடுத்தே இவர்கள் செயற்படுகின்றனர். நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புகின்றனர்.

இப்படியான காட்டிக்கொடுப்பாளர்களுக்கு மக்கள் தக்க பதிலை வழங்குவார்கள். தோட்ட மக்களின் வாழ்க்கை முறை தெரிந்த ஒருவரால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நான் உங்களில் ஒருவன்.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது இலக்கு அந்த இலக்கை சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் நிச்சயம் அடைவோம்" என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.     

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024