ஐரோப்பிய நாடொன்றில் திடீர் துப்பாக்கிச்சூடு! 6 பேர் பலி - 15 பேர் படுகாயம்
போலந்தின் கிராகோவ் நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் காயமடைந்துள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிராகோவ் நகரின் சந்தை சதுக்கத்தில், சனிக்கிழமை பிற்பகலில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை நடத்தியவர் 24 வயதுடைய போலந்து நாட்டவர் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலந்தின் உள்துறை அமைச்சர் கருத்து
நகரின் மையப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான Main Square பகுதிக்குள் வாகனத்தில் நுழைந்து, அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் “நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்; அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று போலந்தின் உள்துறை அமைச்சர் 'எக்ஸ்' (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.
Policjanci z narażeniem życia interweniowali w Krakowie. Natychmiast. Dzięki ich heroicznej postawie udało się szybko ująć napastnika. Jeden z policjantów z raną postrzałową, stan drugiego bardzo ciężki- 3 rany postrzałowe. Trwa operacja.
— Marcin Kierwiński (@MKierwinski) November 7, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |