பதவி விலகப் பின்னடித்த அமைச்சர்கள்! முதலாவது ஆளாக கையெழுத்திட்ட மகிந்த
முழுமையாக அமைச்சரவையும் பதவி விலக முடிவு எட்டப்பட்டவேளை இரு அமைச்சர்கள் கையெழுத்திட பின்னடித்தனர் என சிங்கள ஊடகமொன்று ம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்டோர் முன்னதாக உடன்படவில்லை என்றும்ட அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை விலகல் கடிதத்தில் முதலாவது நபராக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கையெழுத்திட்டுள்ளார்.
அமைச்சரவையில் இருந்து விலகும் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னதாக தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து நேற்றைய சிறப்பு அமைச்சரவை அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்ட போது எண்ணெய், மின்சாரம் மற்றும் எரிவாயு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கு அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவையில் விலகும் கூட்டத்தில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்ததாக கல்வி அமைச்சராக இருந்து தற்போது விலகியுள்ள தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார் என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
