சர்ச்சைக்குள்ளாகிய கோணேஸ்வர ஆலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தென்னிலங்கை அமைச்சர்
திருகோணமலையில் உள்ள கோணேஸ்வர ஆலயத்திற்கு அமைச்சர் விதுர விக்ரம நாயக மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயம் செய்திருந்தனர்.
திருகோணமலையில் பிரசித்தி பெற்ற திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு விஜயம் செய்த அவர்கள் அங்கு விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு கோணேஸ்வரம் கோவிலில் தொல்பொருள் எல்லைக்கு உற்பட்ட பகுதிகளில் எனக்கருதி ஆக்கிரமிக்கப்படும் காணிகள் தொடர்பாகவும் அங்கு நிறுவப்பட்டு வரும் கடைத்தொகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
கோவில் விஜயத்தின் பின்னராக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உற்பட கோவில் நிர்வாகத்தினருடன் குறித்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
வாகனத்தரிப்பிடம் அமைக்க தீர்மானம்
கோவில் தரிசனத்தினை தொடர்ந்து வீதி ஓரப்பகுதியில் நிறுவப்பட்ட அனைத்து கடைகளையும் அங்கு இருந்து அகற்றி அதற்கு பொருத்தமானதோர் இடத்தில் நிறுவுவதற்கும் மேலும் கோவிலுக்காக பயன்படுத்தப்படும் வீதியில் அதிக வாகனங்கள் செல்ல முடியாததன் காரணமாக வாகனத்தரிப்பிடம் ஒன்றினை ஏற்படுத்துவத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த கடைகள் எந்தவொரு அனுமதியும் இன்றி நிறுவப்பட்டுள்ளதுடன் அதற்காக எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கபடாத காரணத்தினால் அவற்றினை அங்கிருந்து அகற்ற முடியும்.
அத்துடன் தொல்பொருள் திணைக்களத்த்தின் எல்லைக்குற்பட்ட பகுதிகளில் கடைகளை நிறுவ அனுமதிக்கும் பற்சத்தில் ஏனைய மாவட்டங்களிலும் அவ்வாறு கடைகளை நிறுவ அனுமதி வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.