பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்
இலங்கையிலுள்ள 8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(18) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளில் இந்த திட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மதிய உணவு திட்டம்
இந்த திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும், திறைசேரியின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கான வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐந்தாம் தர புலமைப் பரிசிலுக்காக ஒதுக்கப்படும் 750 ரூபாவை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலவச பாடப்புத்தகங்களுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |