கல்வி அமைச்சுக்கு கோப் குழு பிறப்பித்த உத்தரவு..!
Ministry of Education
Government Of Sri Lanka
By Dharu
அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பாக பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சுக்கு கோப் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொழில் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் நாடாளுமன்றத்தில் அழைத்து கலந்துரையாடிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பாண்டர இவ் உத்தரவை செயல்படுத்தினார்.
குறித்த உத்தரவை வெளியிட்ட நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கல்வி அமைச்சு, விளையாட்டு துறை அமைச்சு, தொழில் பயிற்சி அமைச்சு, தேசிய இளைஞர் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் என அனைத்து நிறுவன உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த கூட்டத்தின் போது ஏற்றுக்கொள்ள கூடிய எவ்வித தகவல்களும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி