விரைவில் புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - அநுர தரப்பு அறிவிப்பு
இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
குறித்த விடயங்களை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார (Shantha Pathma Kumara) தெரிவித்துள்ளார்.
பரீட்சையை தடை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலமைப்பரிசில் பரீட்சையை தடை செய்யாததால் வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.
எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
