தனுஷ்கோடியில் அதிசயம் - 62 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த பாலம்
பேரிடர் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தனுஷ்கோடி தரைப்பாலம் 62 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெளிப்பட்டுள்ளதக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
குறித்த பாலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியே தென்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மண் அரிப்பு காரணமாக முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் இந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி தற்போது தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலுக்குள் புதைந்திருந்த தரைப்பாலம்
1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயல் தனுஷ்கோடி நகரை பெரிதும் பாதித்ததுடன், அப்பகுதியில் இருந்த பல கட்டமைப்புகள் கடலில் மூழ்கியிருந்தன.

இந்நிலையில், பல தசாப்தங்களாக கடலுக்குள் புதைந்திருந்த தரைப்பாலம் மீண்டும் வெளிப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
வெளிவரத் தொடங்கியுள்ள தரை பாலத்தை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்புள்ளது.
அன்று கடலில் மூழ்கிய கட்டடங்கள், வீடுகள் மற்றும் பொருட்கள் இனி ஒவ்வொன்றாக வெளிவரவும் வாய்ப்பு உள்ளது என சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 14 மணி நேரம் முன்