23 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றல் - சிறிலங்கா கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை
மிரிஸ்ஸ கடற்பரப்பில் 23 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை ஒரு வார காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வியாழன் (05) காலை மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சிறிலங்கா கடற்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த மீன்பிடி இழுவை படகுடன் 33 மற்றும் 42 வயதுடைய 05 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தினால் உத்தரவு
கைது செய்யப்பட்ட பின்னர், மிரிஸ்ஸ, கம்புருகமுவ மற்றும் பிட்டிகல பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்திய பின்னர் சந்தேகநபர்களை ஒரு வார காலம் விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
