நீலக் கொடி கரையோர வலயமாக மாறவுள்ள கடல்பகுதி...அமைச்சரவை ஒப்புதல்!
மிரிஸ்ஸ கடல் வலயத்தை (Mirissa marine zone) நீலக்கொடி கரையோர வலயமாகவும் சர்வதேச தரத்திற்கு இணங்க கடல்சார் வனவிலங்கு சரணாலயமாகவும் மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு (2023) மே மாதம் நடைபெற்ற கூட்டத்தில், மிரிஸ்ஸ கடல் வலயத்தை வனவிலங்கு சரணாலயமாக பிரகடனப்படுத்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து அமைச்சர்கள் அமைச்சரவை விவாதித்தது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் பிரேரணையை குறித்த மேலும் ஆய்வு செய்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக பிரதமர் தலைமையில் அமைச்சு உபகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
அமைச்சரவை அங்கீகாரம்
அதன்படி, மிரிஸ்ஸ கடல் வலயத்தை நீலக்கொடி கரையோர வலயமாகவும் சர்வதேச தரத்திற்கு இணங்க கடல்சார் வனவிலங்கு சரணாலயமாகவும் மாற்றுவதன் மூலம் தென் மாகாணத்தின் சுற்றுலாப் பொருளாதாரத்தை ஐந்து மடங்காக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு உபகுழு பரிந்துரைகளை செய்துள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் ஊடாக அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |