இப்ராஹிம் ரைசியின் மரணத்தின் பின்னரான ஈரானின் நகர்வு
ஈரானின் (Iran) 14 வது அதிபர் தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என்று ஈரானின் அரசாங்கம் திங்களன்று முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
ஈரான் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி உரிய நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன், 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அதிபரை நியமிக்க வேண்டும்.
ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) உள்ளிட்ட அவரது குழுவை சேர்ந்த 8 பேர் உலங்கு வானூர்தி நேற்று முன்தினம்(19) ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர்.
புதிய அதிபர்
அத்துடன், அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, அதிபரால் கடமைகளைச் செய்ய முடியாவிட்டால், முதல் துணை அதிபர் நிர்வாகக் கிளைக்கு தலைமை தாங்குவார்.
இதேவேளை, அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டுள்ளார்.
வாக்குப்பதிவு
இந்நிலையில், தற்போது ஈரானின் இடைக்கால அதிபராக முகமது முக்பர் (Muhammad Mukhbar) செயல்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், ஈரானில் மே 30 முதல் ஜூன் 03 ஆம் திகதி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும், அதனைதொடர்ந்து வேட்பாளர்கள் ஜூன் 12 முதல் 27 வரை தேர்தல் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என அறிக்கை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |