அறக்கட்டளை எனும் பெயரில் தமிழ் பெண்களுக்கு இப்படி ஒரு நிலையா....!
"எங்களினுடைய தமிழ் பெண்களை அனுபவித்து விட்டு செல்லலாம் என்கின்ற நிலைப்பாடு தெற்கிலும், சில தமிழர்கள் மத்தியிலும், புலம்பெயர்ந்து வருகின்றவர்கள் மத்தியிலும் இருக்கின்றது.
புலம்பெயர்ந்த தேசங்களில் இருப்பவர்கள் சுற்றுலாவிற்காக மட்டும் எமது தமிழர் தாயகத்திற்கு வருவதில்லை, எமது பெண் பிள்ளைகளின் கற்பை சூறையாடுவதற்காகவே வருகின்றனர்."
இதற்கான ஆதாரங்கள் பல என்னிடம் நிறையவே இருக்கின்றது."
இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
துர்ப்பாக்கிய நிலை
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"பெற்றோர்கள் விழித்துக்கொள்ள வேண்டும், எமது சமூகத்தில் உள்ளவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களும் கவனமாக இருக்க வேண்டும், ஒரு பிள்ளை பாடசாலை வரவில்லை என்றால் அந்த பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை ஆராய வேண்டும்.
பெற்ற தாய்மார்களே தனது பிள்ளையை வேறு ஒருவருடன் அனுப்பும் துர்ப்பாக்கிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
எல்லா தகவல்களையும் நான் சேகரித்து வைத்துள்ளேன்.
அறக்கட்டளை என்னும் பெயரில் எமது தமிழ் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள்களும், தொலைபேசிகளும் வாங்கி குடுத்து ஏமாற்றுகிறார்கள்.
புலம்பெயர் பணங்களை கொண்டு வந்து சுய தொழில் வாய்ப்பு என்னும் பெயரில் பெண்களை வசப்படுத்துகின்றனர்.
புலம்பெயர் தேசங்களில் இருந்து வரும் பணத்தை நிறுத்தி, சரியான முறையில் அந்த பணத்தை பயன்படுத்தி இங்கே தொழிற்சாலைகளை நிறுவி எமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குங்கள்.
புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் உழைத்து எமது மக்களின் நலனுக்காக பணம் அனுப்புகிறார்கள்.
ஆனால் அவ்வாறு அனுப்பப்படும் பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை." இவ்வாறு உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
