திருமணமான உலக அழகிப்போட்டியில் சாதித்த இலங்கை பெண்ணுக்கு வரவேற்பு
அமெரிக்காவின்(us) லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இஷாதி அமண்டா நேற்று (04) இலங்கை(sri lanka) திரும்பினார்.
இந்தப் போட்டி கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் இதில் பங்கேற்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு
அவரை வரவேற்க இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா நேற்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றது.
இலங்கை தேசிய பணிப்பாளர் சண்டிமல் ஜெயசிங்க, இலங்கை பயிற்சியாளர் ருக்மல் சேனநாயக்க, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியக இயக்குநர் சுபாஷினி பெரேரா, உதவி இயக்குநர் சுரேஷானி பிலபிட்டிய உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முதலாம் இடம்பிடித்த தென்னாபிரிக்க அழகி
தென்னாபிரிக்காவின் ட்சேகோ கேலே மிஸஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளார். தாய்லாந்தின் ப்ளாய் பான்பெர்ம் மூன்றாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
Watch: The moment Sri Lanka’s Ishadi Amanda made history as the country's first runner-up at the 40th Mrs. World pageant in Las Vegas, USA.
— Asian Mirror (@AsianMirror) January 31, 2025
South Africa’s Tshego Gaelae claimed the coveted title, while Thailand’s Ploy Panperm secured the 2nd runner-up position. pic.twitter.com/DbJnQ6X57r
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |