தொடருந்தின் மலசல கூடத்தில் மீட்கப்பட்ட குழந்தை - நீதிமன்ற தீர்ப்பு!
Sri Lanka Police
Crime
By Pakirathan
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்தின் மலசல கூடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (10) இரவு 15 நாட்களேயான பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் அந்த குழந்தையின் தாயும், தந்தையும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் அக் குழந்தையின் தந்தை பதுளை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதவான் உத்தரவு
அதனையடுத்து அவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்