பிஸ்டல்,தோட்டாக்கள் மாயம் : அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல்துறை அதிகாரி பணிநீக்கம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
பிஸ்டல் மற்றும் 26 தோட்டாக்கள் காணாமல் போனமையினால் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பிஸ்டல் மற்றும் தோட்டாக்களை அவர் பெட்டகோவில் ஒரு பையில் வைத்திருந்ததுடன், அருகில் வேறு பணி செய்து கொண்டிருந்த போது, பை காணாமல் போனது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடிபோதையில் இருந்த காவல்துறை சார்ஜன்ட்
அப்போது காவல்துறை சார்ஜன்ட் குடிபோதையில் இருந்ததால் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

தோட்டாக்கள் மற்றும் பிஸ்டல் அடங்கிய பையை திருடிய நபரை கைது செய்ய சி. சி. டி. வி. கமராக்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரி கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
4ம் ஆண்டு நினைவஞ்சலி