17 வயது சிறுமி மாயம் - மக்கள் உதவியை நாடிய காவல்துறை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
நீர்கொழும்பு – லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உதவி

இந்த நிலையில் அவரைக் கண்டு பிடிப்பதில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அதேவேளை, குறித்த சிறுமியை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு தலைமையக காவல்துறை பரிசோதகர் – 0718 591 630
நீர்கொழும்பு காவல்துறை நிலையம் – 0312 222 227
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி