காணாமற்போன யுவதி சடலமாக கண்டெடுப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
கடந்த 03 நாட்களுக்கு முன்னர் காணாமற்போன 24 வயதுடைய யுவதி இன்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கால்வாயின் கரையில் யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையில் வசித்து வந்த 24 வயதுடைய மொஹமட் அமீன் பாத்திமா அஸ்மியா என்ற யுவதியின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தந்தை காவல்துறையில் முறைப்பாடு
குறித்த யுவதி கடந்த 27ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயுள்ளதாகவும், அவர் வீட்டின் பின் கதவு வழியாக வெளியேறியுள்ளதாக அவரது தந்தை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன சிறுமி அணிந்திருந்த செருப்பு ஒன்று நேற்று (29) வீட்டுக்கு அருகில் உள்ள வெலிபன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்