புதிய களனி பாலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
வீதி அபிவிருத்தி அதிகார சபையானது பொதுமக்களுக்கு விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் நாளை (01) இரவு 9 மணி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் இரண்டாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 8 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 11 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் மூன்றாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 15 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் புதிய களனி பாலத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினரால் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |