அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் சிறிலங்கா அரசாங்கம் : குற்றம் சாட்டும் பேர்ள அமைப்பு!
இலங்கையில் மாவீரர் நாள் நினைவேந்தல்களில் பங்கேற்றவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தமை தொடர்பில் இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்திருந்த போதிலும் அந்த சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நினைகூரல் நிகழ்வுகளை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் தவறு
இது தவறான செயல் என பேர்ள் எனும் மக்கள் அமைப்பு அதன் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
தமிழர்களிற்கு எதிரான சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை முன்னைய அரசாங்கங்களை போல, தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிங்கள - பௌத்த பேரினவாத கொள்கைகளை தற்போதைய அரசாங்கம் பின்பற்றுவதாக பேர்ள அமைப்பு மேலும் கூறியுள்ளது.
PEARL is deeply concerned by the continued use of the Prevention of Terrorism Act (PTA) to criminalize peaceful Tamil memorialization on Maaveerar Naal. Despite international calls to repeal the PTA, the recent crackdown of Tamils by security forces shows that the current GOSL is… https://t.co/hXWkrCG7j3
— PEARL Action (@PEARL_Action) November 29, 2023
சிறிலங்கா அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும், இலங்கையில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |