ஈரானில் வெடித்த மக்கள் புரட்சி - முடங்கிய இணைய சேவைகள்
ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான மக்கள் நடத்தி வரும் போராட்டம் மாபெரும் போராட்டமாக வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி (Reza Pahlavi) விடுத்த அழைப்பை ஏற்று, வியாழக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் "சர்வாதிகாரமே ஒழிக" என முழக்கமிட்டனர். காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.
சர்வாதிகாரமே ஒழிக
போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,260-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
12th day of anti-establishment protests in Iran
— Ghoncheh Habibiazad | غنچه (@GhonchehAzad) January 8, 2026
The crowd of protesters in Tehran got bigger. Same location as the one quoted here@GeoConfirmed https://t.co/zwOV0BvI4Q pic.twitter.com/oa5c6HNao6
இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக ஈரான் அரசு நாடு முழுவதும் இணையதள சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில், ஈரான் தற்போது ஒரு முழுமையான 'இணைய இருட்டடிப்பு' சூழலில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், விமான போக்குவரத்துகளும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 5 மணி நேரம் முன்