பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்!
இலங்கையில் மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற மேலும் பலரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாவீரர் நாளை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை தமிழர் தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர்
இதன் போது, 9 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இதில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவரொருவரும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 20 பேரை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதமாக கருதப்படாத செயல்
அத்துடன், வாகனங்களை குத்தகைக்கு எடுத்த நபர், ஒலிபெருக்கிகளை கொண்டு வந்தவர்கள் மற்றும் சிவப்பு-மஞ்சள் கொடிகளை நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக கொண்டு வந்தவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், வாகனங்களை குத்தகைக்கு எடுப்பது பயங்கரவாதமாக கருதப்படாதென அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்கால திட்டம்
கைது செய்யப்பட்டவர்களுள் 3 பேர் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
#PTA
— Ambika Satkunanathan (@ambikasat) November 30, 2023
To date, 9 persons (not 7), reportedly including one woman, have been arrested and remanded in Batticaloa prison. In court, police said they were looking to arrest 20 in total. Photo👇🏽is of goods that were seized by the police, which led to arrest of some. @EU_in_Sri_Lanka https://t.co/TiKp2xC2Hg pic.twitter.com/CztJAn7Fvl
இலங்கையில் தீர்வு காணப்படாத பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அவற்றுக்கு தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்குமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |