காணாமற்போன மாணவிகள் கண்டுபிடிப்பு
கிண்ணியாகல பொல்வத்த பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவிகளும் சாரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீகபவத்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிண்ணியாகலையிலுள்ள பாடசாலையொன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இந்த வருடம் க.பொ.த பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரு மாணவிகளும் கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், இவர்கள் இருவரும் பதினாறு வயதுடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிடைத்தது தகவல் -கண்டு பிடிக்கப்பட்ட மாணவிகள்
மீகபவத்தை காவல் நிலைய பிரதான பரிசோதகர் டபிள்யூ. கே.விஜேதிலக்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு மாணவிகளையும் கண்டுபிடிக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு மாணவிகளும் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது தாய்மார்கள் கிண்ணியாகலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த இரண்டு மாணவிகளும் கொழும்பு வந்த பின்னர் மாணவி ஒருவருடன் தொடர்பில் இருந்த இளைஞனுடன் பேசி அவரைச் சந்தித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மீகபவத்தை காவல் நிலையப் பிரதான பரிசோதகர் டபிள்யூ. கே. விஜேதிலக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
