யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் : வெளியான அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 1788 பேர் காணாமல் போயிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருப்பதோடு அவற்றில் 1289 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்றையதினம் உரையாற்றிய போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
யாழ்ப்பாணத்தில் காணாமற்போனவர்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 1788 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆறு மாதங்களுக்குள்
இவ்வாறு காணாமற்போனவர்கள் குறித்து 1289 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே எஞ்சிய 500 க்கு கிட்டிய முறைப்பாடுகளை விரைவில் விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அதிபர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த பணிகளை நிறைவு செய்து காணாமல் போனோர் அலுவலகத்துடன் தொடர்புபட்டு செயற்படுமாறும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |