'நிதிக்காக போராடவில்லை : நீதிக்காக போராடுகிறோம்' - காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆதங்கம்

Ajmal Ameer Missing Persons Mannar Death
By Mathu Jul 13, 2023 09:50 AM GMT
Report

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை, ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது? நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று வியாழக்கிழமை(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகள் (ஓ.எம்.பி) மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ளுமாறு கதைத்து பார்த்தனர்.

ஆனால் அந்த விடயம் சரி வரவில்லை. அதனை தொடர்ந்து ஒவ்வொரு அம்மாக்களையும் அழைத்து பேசி பார்த்தனர். அதுவும் சரி வரவில்லை.

ஆனால் தற்போது அரச திணைக்களங்களை அழைத்து பேசுகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை ஒருபோதும் இடம் பெறாது.

குறித்த மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு எங்களுக்கு தேவை இல்லை என்பதை ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

மரண சான்றிதழ்

பாதிக்கப்பட்ட எங்களுடன் கதைத்து பார்த்தார்கள் சரி வரவில்லை. தற்போது திணைக்களங்களை அழைத்து பேசி பார்க்கின்றார்கள். அதுவும் சரி வராது. நாங்கள் ஒரு போதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துப் போக மாட்டோம்.

நாங்கள் நீதியை யே கேட்டு நிற்கின்றோம்.எமது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நடந்தது? நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை. அவ்வாறு காசுக்காக போராடும் அம்மாக்கள் நாங்கள் இல்லை. ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகள் சகல விதத்திலும் எங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றார்கள்.பயனளிக்கவில்லை.

இந்த நிலையில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக எங்களிடம் பேச முற்படுகின்றனர். நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை. அரச திணைக்களத்தை வைத்து கதைக்கும் ஓ.எம்.பி அலுவலகத்தினர் மீண்டும் எங்களுடன் கதையுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார். 

Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011