தமிழ்த்தேசிய போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியே ஜெயவனிதாவின் கைதின் பின்னணி!

Sri Lanka Police Missing Persons Vavuniya Sri Lanka
By Kalaimathy Mar 11, 2023 12:43 PM GMT
Report

எமது போராட்டத்தை மழுங்கடிக்க செய்யும் அடுத்த முயற்சி தான் இந்த மின்சார துண்டிப்பு என தமிழர் தாயக சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை அதிகாரிகளால் வழங்கப்பட்ட மின்சாரத்தை காரணமாக தெரிவித்து, சிறிலங்கா காவல்துறையினர் தம்மை பழிவாங்க வகை தேடியுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர்,

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி தாய்மாரால் சுழற்சி முறையில் வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வழக்குத் தாக்கல்

தமிழ்த்தேசிய போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியே ஜெயவனிதாவின் கைதின் பின்னணி! | Missing Persons Protest Vavuniya Police Arrest

“குறித்த கொட்டகைக்கு அருகில் நாட்டப்பட்டுள்ள மின் கம்பத்தில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கு இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த மின்சார சபையினர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக தெரிவித்து, குறித்த போராட்ட கொட்டகையில் இருந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவுக்கு எதிராக காவல்துறையில், செய்த முறைப்பாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

2210ஆவது நாளாக வவுனியாவில் இரவு பகலாக போராட்ட பந்தலில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.

வயது முதிர்ந்த தாய்மார் இங்கு போராட்டத்தை மேற்கொள்ளும் போது இவ்விடம் பற்றையான இடமாகவும் இருட்டான இடமாகவும் இருந்தமையால், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக போராட்ட பந்தலில் மின்குமிழ் ஒன்றும் இருந்தது.

அதற்கு அப்போதைய வடமாகாண சபை முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன், வவுனியா நகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததனால் வவுனியா நகரசபைக்கு அறிவித்து அவர்கள் மின்சார சபைக்கு தகவல் வழங்கியே மின்னிணைப்பை ஏற்படுத்தி தந்தார்கள்.

அதன் பின்னர் இரண்டு முறை பழுது ஏற்பட்ட போதும் கொழும்பிலிருந்து நேரடியாக மின்சாரசபைக்கு அறிவித்து உடனடியாக செய்து கொடுக்குமாறு கூறி அவர்களே மின்குமிழ்களையும் வழங்கி மின்னிணைப்பை மீள சரிசெய்து தந்தார்கள்.

சட்டவிரோதமாக மின்னிணைப்பை பெற நாங்கள் முயற்சி செய்யவில்லை. அவர்களே மின்சாரத்தை தந்துவிட்டு, இப்போது சட்டவிரோதம் என கூறி வவுனியா மாவட்ட தமிழர் தாயக சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை நேற்று முன்தினம் (09.03.2023) கைது செய்து நேற்றைய தினம் (10.03.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ஒரு சரீர பிணையில் விடுதலை செய்து வழக்கு திகதியை மே மாதத்திற்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.

மின் துண்டிப்பு

தமிழ்த்தேசிய போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியே ஜெயவனிதாவின் கைதின் பின்னணி! | Missing Persons Protest Vavuniya Police Arrest

அன்றைய தினம் மின்சாரத்தை துண்டித்தவர்களையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்குகின்ற பெருந்தொகையான அமைச்சர்களுடைய கோடிக்கணக்கான மின்சார கட்டண நிலுவைகள் உள்ளன.

அவர்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படுத்தவில்லை. இங்கே குறைந்தளவிலான மின்குமிழையை பாவித்திருந்தோம். அரசாங்கமே மின்சாரத்தை தந்துவிட்டு ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது. காலிமுகத்திடலில் அதிகமானோர் மின்சாரம் பாவிக்கும் போது அரசாங்கம் எங்கு இருந்தது.

சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒரு சட்டமா? தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதியா? அதனால் தான் நாங்கள் வெளிநாடுகளை கூப்பிடுகின்றோம்.

அவர்கள் வந்தால் தான் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்கலாம், தமிழ் இறையாண்மை ஒன்று இருந்தால் தான் எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கலாம்.

இங்கே இருக்கின்ற அனைத்து கட்டமைப்புகளும் எந்த நீதியுமே தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. எல்லாமே அநீதியே கிடைக்கின்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருட்டிலே தாய்மார்கள் போராடி கொண்டிருக்கிறார்கள்.

தினமும் இரவுகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவ்வாறான இன்னல்களுக்கு மத்தியிலே போராடி வருகின்றோம். ஒவ்வொரு விடயமும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரியாமல் இல்லை.

ஒவ்வொரு விடயமும் தெரியும் எவ்வளவு நெருக்கடிகளை தந்துவிட்டார்கள். அப்படி இருந்தும் எமது போராட்டத்தை நாங்கள் கைவிடுவதாக இல்லை. அதை நிறுத்த இவர்களின் அடுத்த முயற்சி தான் இந்த மின்சார துண்டிப்பு.

இலங்கை அரசாங்கம் எந்தவொரு ரீதியிலும் எங்களுக்கான தீர்வை தராது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு நீதிக்காக போராடுகின்ற ஒரு தாய் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவோடு இருந்த பிள்ளையின் ஆதாரத்தை காட்டியும் அவருக்கு இன்று நீதி இல்லை.

குற்றவாளிகள் எல்லோரும் சுதந்திரமாக வெளியே இருக்கும் போது மின்சாரத்தை சட்டவிரோதம் என கூறி பிள்ளையை தேடிக்கொண்டிருக்கின்ற தாயை கொண்டு போய் அடைப்பதிலேயே உங்களுடைய நீதித்துறை கவனமாக இருக்கிறது. குற்றம் செய்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.

மூன்று வருடத்திற்கு முதல் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டிருந்தோம். அவருடைய ஆதரவாளர்கள் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர்கள் எனக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள்.

முழு ஆதாரங்களுடன் காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தோம். மூன்று வருடங்களாகியும் ஒரு இஞ்சி கூட நகரவில்லை. அவ்வாறு இருக்க கைது செய்ய வேண்டியவர்களை கைது செய்யாமல் வெளியே விடுவித்துவிட்டு பாதிக்கப்பட்டு நீதி கேட்கிறவர்களை தண்டிக்கிறார்கள்.

மின்சாரத்தை தந்தவர்கள் மின்சாரசபையே அவர்கள் குற்றவாளியாக இருந்து கொண்டு இவர்கள் எங்களை கொண்டு சென்று அடைக்கின்றார்கள் என்றால் என்ன நியாயம். பாதிக்கப்பட்ட மக்கள் துன்பத்தில் இருக்கும் போது அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் சமூகம் ஆதரவு தர வேண்டும்.

சமூகத்தின் , இனத்தின் ஆதரவோடு இருக்கும் போராட்டங்களுக்கு மின்சாரத்தை நிறுத்துவது சட்டவிரோதமானது நீங்கள் செய்வதே அநீதியானது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நிலாவெளி, திரியாய், தண்ணீரூற்று, முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி

27 Dec, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, காரைநகர், கொழும்பு, திருகோணமலை

09 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி கிழக்கு, அச்சுவேலி

26 Dec, 2019
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Scarborough, Canada

19 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

25 Dec, 2014
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Raynes Park, London, United Kingdom

26 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Scarborough, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, விசுவமடு

22 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, நுணாவில், உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பேர்லின், Germany, London, United Kingdom

24 Dec, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Woodbridge, Canada

23 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, வைரவபுளியங்குளம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருக்கேதீஸ்வரம், வவுனியா

22 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் மேற்கு, யாழ்ப்பாணம்

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி