காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்காத இலங்கையின் ஜனாதிபதிகள்

Missing Persons Sri Lankan Tamils Mannar SL Protest President of Sri lanka
By Sathangani Jul 28, 2024 10:53 AM GMT
Report

இலங்கையின் ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் காணாமல் போன எம் உறவுகளுக்கான நீதியை கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இதுவரையில் எந்த ஜனாதிபதியும் எமக்கான பதிலை வழங்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம். ஆனால் எங்களை யாருமே திரும்பி பார்ப்பதாக தெரியவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மன்னார் (Mannar)மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் இன்றைய தினம் (28) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

கவனயீர்ப்பு போராட்டம் 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளோம்.

இலங்கை அரசாங்கமும் சரி சர்வதேசமும் எங்களை ஒரு தடவையாவது திரும்பி பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மாத முடிவில் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்காத இலங்கையின் ஜனாதிபதிகள் | Missing Persons Relations Protest In Mannar Today

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் நின்று போராடி வருகிறோம். ஆனால் எங்களை ஒருவருமே திரும்பி பார்ப்பதாக தெரியவில்லை. எனினும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வீதியில் இறங்கி போராடி வருகிறோம்.

ஆனால் நீதிக்காக ஏங்கி போராடி வருகின்ற அம்மாக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சாட்சிகளும் மறைக்கப்பட்டு கொண்டு செல்கிறது. அதனையே இந்த அரசும் விரும்புகின்றது.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை (OMP) மாவட்ட ரீதியாக ஸ்தாபித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு 2 இலட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறுகின்றனர். எமது உறவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த அரசு இந்த பணத்தை வழங்குகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஊடாக உண்மையை கண்டறிவோம் என கூறப்பட்டுள்ள போதும் இதுவரை உண்மையை கண்டறிய முன் வரவில்லை. ஆனால் இழப்பீடு வழங்குவதற்காக மாத்திரம் முன்னுக்கு வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்காத இலங்கையின் ஜனாதிபதிகள் | Missing Persons Relations Protest In Mannar Today

நாங்கள் நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என்பதே ஓ.எம்.பியின் நோக்கமாக உள்ளது. எமது பிள்ளையின் உயிர் 2 லட்சம் பெறுமதி இல்லை. எங்கள் பிள்ளைகளை திருப்பி தந்தால் 4 இலட்சம் எங்களால் தர முடியும். உயிருடன் ஒப்படைத்த பிள்ளைகளையே கேட்கிறோம்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் தீர்வு தர முடியுமா, நாட்டில் தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் காணாமல் போன எம் உறவுகளுக்கான நீதியை கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

சர்வதேச விசாரணை

நேரடியாக சென்று சந்தித்து கலந்துரையாடியும் உள்ளோம். ஆனால் இது வரையில் எந்த ஜனாதிபதியும் எமக்கான பதிலை வழங்கவில்லை. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் காணாமல் ஆக்கப்பட்ட எம் பிள்ளைகளையும்,உறவுகளையும் மீட்டுத் தருவாரா, அல்லது எமது உறவுகளுக்கு நீதி கிடைக்குமா, அல்லது இருக்கின்ற இடத்தை கண்டுபிடித்து தருவாரா, அந்த எதிர்பார்ப்புக்கள் உடனே இன்றுவரை போராடி வருகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்காத இலங்கையின் ஜனாதிபதிகள் | Missing Persons Relations Protest In Mannar Today

இலங்கை அரசியலில் நம்பிக்கை இல்லை.இவ்வாறான காரணங்களினாலேயே சர்வதேச விசாரணை கோரி போராட்டம் முன்னெடுத்து வருகிறோம்.“ என  தெரிவித்தார்.

இதேவேளை பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்தடைந்த நிரந்தர மின் பிறப்பாக்கி: வைத்திய அத்தியட்சகர் தகவல்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்தடைந்த நிரந்தர மின் பிறப்பாக்கி: வைத்திய அத்தியட்சகர் தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGallery
ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி