வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் உரிய தீர்வினை வழங்குமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை வேண்டும், குற்றவாளிகளை கூண்டில் ஏற்று போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை
இதேவேளை அம்பாறையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.





