மட்டு. ஏறாவூரைச் சேர்ந்த மாணவனை காணவில்லை - தேடுதலில் காவல்துறையினர்!
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனா்.
ஏறாவூர் றகுமானியா குறுக்கு வீதியை சேர்ந்த, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் தொழிநுட்ப பிரிவு மாணவனான அபூபக்கர் முஹம்மட் அஸ்பக் என்பவர் கடந்த 22ஆம் திகதி இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அன்றிரவு 8.30மணிக்கு மின் துண்டிப்பு ஏற்பட்ட நேரம், கருப்பு நிற துவிச்சக்கர வண்டியில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளாா். ஆனால், அவர் இதுவரை வீடு திரும்பவில்லை குறித்த மாணவரின் வீட்டார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனா்.
இந்நிலையில், அவரது கையடக்க தொலைபேசியையும் தொடர்புக் கொள்ள முடியதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனா்.
காணாமல் போன மாணவன் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0777426156 அல்லது 0756372711 என்ற இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
