கனடாவில் மாயமான தமிழ் பெண் -பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை(photos)
கனடாவில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பிரியா கேசவன் (65) என்ற தமிழ் பெண்ணே கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க் கிழமையன்று காணாமல் போனதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடைசியாக அவர் பிஞ்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் காணப்பட்டார். 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் தோள்பட்டை வரை நீளமான தலைமுடியை கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரியா கேசவனின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் உடனடியாக 416-808-3200 என்ற எண்ணிலும், குற்றத்தைத் தடுப்பவர்கள் அநாமதேயமாக 416-222-TIPS (8477)தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



