நீராடச் சென்ற இளைஞன் மாயம் - தேடும் பணிகள் தீவிரம்
young man
sea
ninthavoor
By Vanan
நிந்தவூர் - அட்டப்பள்ளம் கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (21) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது நண்பருடன் கடற்கரைப் பிரதேசத்திற்கு சென்ற குறித்த இளைஞன், மது அருந்திய நிலையில் கடலில் நீராடுவதற்காக சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே. ஜெயஸ்ரீறில் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன், காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்