இரு குழந்தைகளுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
புடலுஓயா ஹரோவத்தை பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் 11 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளின் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளதுடன், அவரும் விஷத்தை உட்கொண்டதனால் மூவரும் ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று (17) பிற்பகல் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளதுடன் அவரும் விஷத்தை உட்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் மனைவி தனக்குத் தெரிவிக்காமல் கொழும்புப் பகுதிக்கு வேலைக்குச் சென்றதானால் இந்த விபரீதமான முடிவை எடுத்துள்ளார், என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், சந்தேக நபரும் அவரது இரண்டு குழந்தைகளும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் புடலுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 12 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்