முல்லைத்தீவில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவை
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன “க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை காலை 8.30 முதல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம் பெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தம் தொடர்பான மக்களிற்குரிய நிவாரண சேவைகளிற்கு முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
* அரச சேவைகளுக்கு பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதி ஏற்படுத்துதல்.
* சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்தல்.
* மக்கள் நேய வினைத்திறனான நிர்வாக அமைப்பை வலுப்படுத்தல்.
* பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்கும் அமைப்பை உருவாக்குதல்.
* சமூக மட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்.
* சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் தரமான நிர்வாகத்தை மேம்படுத்துதல் எனும் நோக்கங்கள் அடைவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுடன் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் விசேட மருத்துவமுகாம், விசேட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் உயர் தொழிற்கல்வி வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் கலாசார நிகழ்வுகள் என்பனவும் இடம் பெறும்.
மக்கள் அனைவரையும் குறிப்பிட்ட நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரிய சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி - தவசீலன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |