மோடியை சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் , “இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.
தமிழ் சமூகத்திற்கு நீதி
பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்.
அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
