இந்தியாவிலிருந்து முதன் முறையாக யாழ் . சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ள பிரதமர் மோடி?
srilanka
Narendra Modi
jaffna international airport
india prime minister
By Sumithiran
மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), இந்தியாவில் இருந்து முதன்முறையாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் நேற்று (15) தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார நிலையத்தை திறந்து வைப்பதற்காக முதலில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர், அதன் பின்னர் கொழும்பு திரும்புவார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர், இதன் போது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
