மோடியின் பதவியேற்பு விழா: இலங்கை அதிபருக்கு வழங்கப்பட்ட உயர் அங்கீகாரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) பதவியேற்பு விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil wikremesinghe) உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி தொடரவுள்ள நிலையில், அவரின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில்(New Delhi) உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.
நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார்.
மோடியின் பதவியேற்பு விழா
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், மாலைதீவு அதிபர் மொஹமட் முயிசு, சீஷெல்ஸ் உப அதிபர் , மொரீஷியஸ் பிரதமர் மற்றும் பூட்டான் பிரதமர் உட்பட பிராந்திய அரச தலைவர்கள் பலர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதுடன் பிராந்திய அரச தலைவர்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பிராந்திய தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய அரச தலைவர்கள் கலந்துகொண்டனர்.
உயர் அங்கீகாரம்
பதவியேற்பு விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பிரசன்னம் குறித்து இந்திய ஊடகங்கள் முக்கிய இடத்தை வழங்கியிருந்ததோடு , புதுடெல்லியின் பிரதான சுற்றுவட்டங்களைச் சுற்றி இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்துள்ளனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா சேனவிரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் அதிபரின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
@tamilwinnews மோடியின் பதவியேற்பு விழாவில் ரணிலுக்கு வழங்கப்பட்ட உயர் அங்கீகாரம் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது. நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார். #LAnkasri #tamilwin #Srilanka #Modi #raniwickramasinghe ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |