பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
புதிய இணைப்பு
சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொடர்மழை மற்றும் மண்சரிவினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சீரற்ற காலநிலை காரணமான பாடசாலைகளை மூடுவது தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கனமழை காரணமாகப் பாடசாலைகளில் வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |