அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகும் மொஜ்தபா கமேனி! ட்ரம்ப் திட்டவட்டம்
மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக வளைதளம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில், அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ அல்லது புதிய அணு ஆயுதங்களை உருவாக்கவோ கூடாது என்பதற்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கமெனி பொதுவெளியில் காணப்படவில்லை. மேலும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களால் வாசிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மூலம் மட்டுமே நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
கமெனியின் உடல்நிலை
முன்னதாக போரின் முதல் நாளில் அவரது தந்தை அலி கமெனியைக் கொன்ற அதே குண்டுவீச்சில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்காக கமெனி செயலிழந்துவிட்டார் அல்லது சிகிச்சை பெற்று வருகிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் கமெனியின் உடல்நிலை குறித்துக் அப்போது கேட்டபோது, ட்ரம்ப், “எனக்குத் தெரியாது, அவரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லைஇ
அவர் சொல்லும் கதைகளை நீங்கள் நம்பினால், அவர் பல விடயங்களைத் தவறவிடுகிறார்.
நான் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். நான் எல்லோரையும் சந்திக்க விரும்புகிறேன்.எல்லாம் எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்து , நாங்கள் ஒரு கட்டத்தில் சந்திக்கக்கூடும்” என்று பதிலளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |