விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: வெளியான நற்செய்தி
கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை (10) விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபை விடுத்துள்ளது.
இதன்படி, சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (10) அம்பாறை மாவட்டத்தில் 7,657 ஏக்கர் நிலத்திற்கான 8,705 விவசாயிகளின் கணக்குகளில் ரூ. 122 மில்லியன் வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.
பயிர் சேத நிதி
அத்தோடு, மேலும் பல பிரதேசங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதோடு, பொலன்னறுவை மாவட்டத்தில் 6239 விவசாயிகளுக்கு 9067.40 ஏக்கருக்கு ரூ.114 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் கணக்குகளில் பயிர் சேத நிதியை வரவு வைக்கத் தொடங்கியுள்ளதாகவும், அதன்படி, சேதமடைந்த 4,324 ஏக்கர் பயிர்களுக்கு 3,272 விவசாயிகளின் கணக்குகளில் 70 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)