இவரைத் தெரியுமா - பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை
பாரிய பணமோசடியில் ஈடுபட்ட மேற்குறிப்பிட்ட படத்தில் உள்ளவரை கைது செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 19.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்ததாக குறித்த தனியார் நிறுவன உரிமையாளர் தொடர்பில் 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்

இதனையடுத்து அவரைக் கைது செய்வதற்காக மிரிஹன குற்றப்புலனாய்வு விசேட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொது மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர் அவரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரைரைக் கண்டால் நுகேகொடை காவல் நிலைய பொறுப்பதிகாரியை 0718591641 என்ற எண் மூலமும் மிரிஹன காவல் நிலைய பொறுப்பதிகாரியை 01122852556 அல்லது 0718137373 என்ற எண் மூலமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்