சுகாதார பரிசோதகராக வேடமிட்டு பணமோசடி - கையும் களவுமாக சிக்கிய நபர்
Sri Lanka Police
Sri Lanka
By pavan
தன்னை பொது சுகாதார பரிசோதகர் என அடையாளப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை ரம்புக்கனை காவல்துறையினர் கைது செய்துள்ளனா்.
ரம்புக்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய திக்பிட்டிய, அரநாயக்க பிரதேசத்தை சேர்ந்தவா் என தொிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேகநபர் ரம்புக்கனை நகரில் உள்ள கடையொன்றுக்கு சென்று பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி பணத்தினை கோாிய போது கடையின் ஊழியா்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று (20) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், ரம்புக்கனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
