அரச உத்தியோகத்தர் போல் நடித்து பல பகுதிகளில் பண மோசடி!
திருகோணமலை - கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் அரச உத்தியோகத்தர் என்று தன்னை அறிமுகப்படுத்தி பணம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வயோதிபர்களிடம் அஸ்வெசும திட்டத்தில் தங்களின் பெயர் வந்துள்ளது என்று கூறி இவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கந்தளாய் ஆரியவங்ச மாவத்தை வாத்தியகம வட்டுக்கச்சி மற்றும் லைட்வீதி போன்ற பகுதிகளில் தன் கைவரிசையை காட்டிள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பணம் மோசடி
தங்களுக்கு அஸ்வெஸ்கம திட்டத்தில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி இப்பகுதிகளில் நான்காயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து கந்தளாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் நடமாடியமை தொடர்பாக அப்பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி போன்றவற்றில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கந்தளாய் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |