காவல்துறையினரின் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: ஐந்து கிராமவாசிகள் கைது
கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர், கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரின் காவலில் இருந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த (25) நண்பகல் குறித்த நபரைப் பிரதேசவாசிகள் பிடித்து கொபெய்கனே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, அவர் இரண்டு நாட்களாகப் காவல் காவலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், நேற்று (27) இரவு அவர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரைப் பிடித்துப் காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஐந்து பிரதேசவாசிகளை கொபெய்கனே காவல் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில், சந்தேகநபரைப் பிடித்து மரமொன்றில் கட்டிவைத்திருந்தபோதும், ஒரு மணித்தியாலம் நிறைவடைவதற்கு முன்னரே காவல்துறைனருக்கு அறிவித்து, எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவரைப் பாதுகாப்பாக ஒப்படைத்ததாகக் கூறியுள்ளனர்.
கிராமவாசிகளால் சந்தேகநபர் தாக்கப்பட்டிருந்தால், அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், உயிரிழந்த நபர் தொடர்பான திருட்டுச் சம்பவங்கள் குறித்து இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் காவல்துறையினருக்கு அறிவித்திருந்ததாகவும், அப்போது அவரைப் பிடித்துத் தங்களிடம் ஒப்படைக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சந்தேகநபரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை முடிவுகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |