ஸ்பெயினில் 39 பேரின் உயிரைப் பறித்த தொடருந்து விபத்து
ஸ்பெயினில் இரண்டு அதிவேக தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடருந்துகள் இரண்டும் மோதிக்கொண்டதில் தொடருந்தின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, மேட்டுப் பகுதியிலிருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து டோலிடோ மாகாணத்தில் உள்ள லோஸ் யெபெனஸ் மற்றும் உர்டா ஆகிய இடங்களுக்கு இடையே அமைந்துள்ள மாட்ரிட்-அண்டலூசியா அதிவேக தொடருந்து பாதையில் இன்று (28) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரம்
மாட்ரிட்டிலிருந்து செவில்லே நோக்கி சென்றுகொண்டிருந்த 'ரென்ஃபே ஏவிஇ' தொடருந்தும், எதிர்த்திசையில் பயணித்துக்கொண்டிருந்த 'இரியோ'தொடருந்துமே நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அவசர மருத்துவக் குழுக்கள் விரைந்து சென்று, காயமடைந்த பலருக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |