விமான கடத்தலை தடுத்த இந்திய விமானி..! உயரிய விருது வழங்கி கௌரவித்த நாடு
நடுவானில் சக விமானி தாக்குதலின் போதும் துணிச்சலுடன் போராடி பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் 'First Class Order of Zayed II' (பர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆப் சையத் II) எனும் உயரிய விருதை ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வழங்கி கௌரவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணிச்சலுடன் போராடிய விமானக் குழுவினரை ஜனாதிபதி, இளவரசர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.
இந்தியாவிற்குப் பெருமை
மக்களின் பாதுகாப்பைப் பேணுவதே ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான முன்னுரிமை என்பதையும் வலியுறுத்தினர்.

இந்த கௌரவ விருதைப் பெற்றதில் பெருமிதம் கொள்வதாகவும், தங்கள் சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாகவும் விமானக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு கடந்த செப். 30 அன்று 174 பயணிகளுடன் சென்ற விமானத்தில் சக விமானி ஒருவர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி ஸ்மித் மச்சார், சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்தியப் பைலட் ஸ்மித் மச்சாரின் இந்த செயல் உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |