கரூரிலேயே தவெக விஜய்யை முடிக்க திட்டம்: சர்ச்சை கருத்தால் அம்பலமான உண்மை
தமிழகத்தில் தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு அரச அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதாகப் பரவும் தகவல்களுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலரான டிட்டா சரவணன் மீதே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவலைத் தொடர்ந்து, “கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?” என டிட்டா சரவணன் கேள்வி எழுப்பிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
விசாரணை நடத்த நடவடிக்கை
குறித்த கருத்து தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, டிட்டா சரவணனிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |