முன்னாள் சுவிஸ் அழகி ட்ரம்ப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் அழகி பெட்ரைஸ் கெவுல் என்பவர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எப்ஸ்டீன் உடன் ட்ரம்ப்புக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கும் அமெரிக்க நாடாளுமன்றின் ஜனநாயக கட்சி குழுவிடம் அவர் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் அறையில் அத்துமீறல்
கெவுல் அளித்த குற்றச்சாட்டில், 1993ம் ஆண்டு நியூயோர்க் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில், ட்ரம்ப்பை முதலில் சந்தித்தேன். எப்ஸ்டீன் உடன் ட்ரம்பும், நானும் சிறிது நேரம் செலவிட்டோம். அதன் பிறகு ஹோட்டல் அறையில் ட்ரம்ப் என்னை பாலியல் அத்துமீறல் செய்தார் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, ட்ரம்பின் நடவடிக்கைகளால் குடியரசு கட்சிக்கு அதிகரிக்கும் செல்வாக்கை ஏற்க முடியாமல் அதனை திசை திருப்ப ஜனநாயக கட்சியினர் முயற்சி செய்கின்றனர் என தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நெருங்கும் வேளை முன்னாள் அழகி ஒருவர் ட்ரம்ப் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |